நீலகிரியில் ரூ.4.32 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை உள்ளிட்ட 59 குழுவினர் ஞாயிற்றுக்கிழமை
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை உள்ளிட்ட 59 குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனைகளில் 7 பேரிடமிருந்து ரூ.4 லட்சத்து 31,500 பறிமுதல் செய்யப்பட்டது.
உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் 2 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 49,500, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 பேரிடமிருந்து ரூ. 2 லட்சத்து 24,000, குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.58,000 என மொத்தம் ரூ. 4 லட்சத்து 31,500 கைப்பற்றப்பட்டது. 
இவற்றையும் சேர்த்து இதுவரை உதகை தொகுதியில் ரூ.1 கோடியே 65,950, கூடலூர் தொகுதியில் ரூ.1 கோடியே 44 லட்சத்து 20,470,  குன்னூர் தொகுதியில் ரூ.35 லட்சத்து 2,860 என மொத்தம் ரூ.2 கோடியே 79 லட்சத்து 89,280 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
அதில் 8 பேருக்கு ரூ.8 லட்சத்து 68,500 என மொத்தம்  71 பேருக்கு ரூ.1 கோடியே 64 லட்சத்து 60,490 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com