மகள் சாவில் மர்மம்: போலீஸில் தந்தை புகார்
By DIN | Published On : 01st April 2019 08:54 AM | Last Updated : 01st April 2019 08:54 AM | அ+அ அ- |

கூடலூர் வட்டம், நாடுகாணி பகுதியில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடுகாணி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சுகந்தி (24). இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தேவாலா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சுகந்தியின் தந்தை செல்லதுரை, தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக தேவாலா காவல் நிலையத்திலும், வருவாய்த்துறையிடமும் புகார் அளித்தார். அதன்பேரில், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சுகந்தியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.