முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்
By DIN | Published On : 12th April 2019 09:24 AM | Last Updated : 12th April 2019 09:24 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி கடந்த புதன்கிழமை துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்றதால் யானை சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், வழக்கம்போல நிர்வாகம் யானை சவாரியை துவங்கியுள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு தேர்வுக் காலம் என்பதாலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாலும் சுற்றுலாப் பயணிகள் வரத்து மிகக் குறைவாக உள்ளது. மேலும் யானை சவாரி செல்வதற்கு முன்பதிவு செய்ய பயணிகள் யாரும் முன்வராததால், சவாரிக்கு வந்த இரண்டு யானைகளும் திரும்பிச் சென்றன.