கூடலூரில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
By DIN | Published On : 07th January 2019 09:43 AM | Last Updated : 07th January 2019 09:43 AM | அ+அ அ- |

கூடலூருக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ராஜகோபாலபுரம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சாஸ்தாபுரி அரங்கில் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி வந்து 500 பேர் ஆ.ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் முபாரக், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் ராமசந்திரன், எம்.எல்.ஏ. திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பாண்டியராஜ், ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி, நெல்லியாளம் நகரச் செயலாளர் காசிலிங்கம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கூடலூர், பந்தலூர் ஒன்றியங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆ.ராசா புறப்பட்டுச் சென்றார்.