கூடலூர் பகுதியில் சூறாவளி: வாழைத் தோட்டங்கள் சேதம்
By DIN | Published On : 14th June 2019 09:18 AM | Last Updated : 14th June 2019 09:18 AM | அ+அ அ- |

கூடலூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக சூறாவளிக் காற்றுடன் பெய்யும் கன மழையால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வாழைத் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.
கூடலூர் பகுதியில் பெய்துவரும் கன மழையால், தொரப்பள்ளி அருகே குனில்வயல் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள வயல்களில் விவசாயிகள் பரவலாக வாழை பயிரிட்டிருந்தனர். மழைச் சேத மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.