கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது வனத் துறைக்குத் திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச் சரகத்தில் யானை இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலர் காந்தன், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் பிரேத பரிசோதனை செய்தார். இறந்தது சுமார் 35 வயதுடைய ஆண் யானை என்றும், கூடுதல் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.