நீலகிரி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 05th May 2019 03:42 AM | Last Updated : 05th May 2019 03:42 AM | அ+அ அ- |

நீலகிரி கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தலூர் வட்டம், தாளூர் பகுதியில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி தலைமை வகித்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும்முதுகலை படித்த 105 மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் கல்லூரி தலைவர் டாக்டர் ஆலுங்கல் முகமது துவக்க உரையாற்றினார். செயலாளர் ரசீத் கசாலி, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் டாக்டர் கே.கே.என்.கரூப், முன்னாள் பதிவாளர் டாக்டர் எம்.தாசன், முஜீப் ஜெயூன் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.தொரை உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், பட்டமும் வழங்கப்பட்டன.
பிற்பகல் நிகழ்ச்சியில் கல்லூரியின் அகாடமிக் டீன் பேராசிரியர் மோகன்பாபு, அன்வர் சாதிக், மக்கள் தொடர்பு அலுவலர் உம்மர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.