ஓவேலி பகுதியில் 3 பேர் தற்கொலை
By DIN | Published On : 19th May 2019 07:18 AM | Last Updated : 19th May 2019 07:18 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 3 பேர் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
கூடலூர் வட்டத்திலுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் சுப்பிரமணி என்பவருக்கும் கனகராஜின் மனைவி விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து விஜயலட்சுமி(25) தனது மகள் அஞ்சலி (10), திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கருப்புச்சாமியின் மகன் சுப்பிரமணி (39) ஆகிய மூன்றுபேரும் குறிஞ்சி நகருக்கு சமீபத்தில் வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மூன்று பேரும் வீட்டிற்கு அருகே உள்ள காப்பித் தோட்டத்தில் விஷம் குடித்து உயிருக்குப் போராடுவது தெரியவந்துள்ளது. உடனே அப்பகுதியிலுள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து நியூஹோப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.