முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் கரடி சாவு
By DIN | Published On : 26th May 2019 12:17 AM | Last Updated : 26th May 2019 12:17 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் கரடி இறந்து கிடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கார்குடி வனச் சரகத்தில் உள்ள தெப்பக்காடு பீட்டில் ஒரு கரடி இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச் சரக அலுவலர் தயானந்த் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் அதே இடத்தில் கரடியின் சடலத்தை எரியூட்டினர். இறந்து கிடந்தது சுமார் 6 வயதுடைய பெண் கரடி என்றும், மற்றொரு கரடியுடன் ஏற்பட்ட சண்டையிட்டதில் இறந்துள்ளது என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.