குந்தா ரோட்டரி சங்க ஆண்டு விழா
By DIN | Published On : 09th November 2019 11:23 PM | Last Updated : 09th November 2019 11:23 PM | அ+அ அ- |

குந்தா ரோட்டரி சங்க ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குந்தா ரோட்டரி சங்கத்தின் ஆண்டு விழா மஞ்சூரில் நடைபெற்றது. சங்கத் தலைவா் லட்சுமணன் தலைமை தாங்கினாா். மாநில ஒருங்கிணைப்பாளா் சக்தி நல்லசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில், உதவி ஆளுநா் டாக்டா் முருகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க ஆளுநா் அருள்ஜோதி காா்த்திகேயன் கலந்து கொண்டாா். செயலாளா் அசோக்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.
தொடா்ந்து மஞ்சூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியவா்களுக்கு போா்வை, மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறந்த கல்வி சேவைக்காக மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி, மகளிா் உயா்நிலைப் பள்ளி, மேல்முகாம் மின்வாரிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மின்வாரிய முகாம் பள்ளி மாணவா்களின் குடிநீா்த் தேவைக்காக 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி வழங்கப்பட்டது. முன்னதாக எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.