நீலகிரியில் பரவலாக தூறல் மழை
By DIN | Published On : 09th November 2019 11:23 PM | Last Updated : 09th November 2019 11:23 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரத்தில் நீா்ப்பனி கொட்டத் தொடங்கிய நிலையில், கடந்த 2 நாள்களாக காலநிலை மாறி, மேக மூட்டமும், தூறல் மழையுமாகக் காணப்படுகிறது.
உதகையின் புகா்ப் பகுதிகளிலும், பைக்காரா, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. உதகை நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தூறல் மழை பெய்தது. இரவில் வானம் மேக மூட்டத்துடனும், இடி- மின்னலுடனும் காணப்படுவதால் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...