கோத்தகிரி மிளிதேன் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கருத்தரங்கு
By DIN | Published On : 01st September 2019 06:54 AM | Last Updated : 01st September 2019 06:54 AM | அ+அ அ- |

கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜு, ஊர் தலைவர் பில்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி வன அலுவலர் குருசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில், முதல்கட்டமாக பள்ளி வளாகத்தில் புல் வகைகள் நடவு செய்யப்பட்டன. இத்திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. கருத்தரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீராதாரங்கள், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து பேசப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் குறித்த அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் கருவி அறக்கட்டளை, நீலகிரி இயற்கை வரலாறு சங்கம், கோத்தகிரி சிட்டிசன் கலெக்டிவ், அஸ்ட்ரிம் ஈகாலஜி, பேரு அறக்கட்டளை, கீஸ்டோன் அமைப்பு, மிளிதேன் நலக்குழு ஆகியவை பங்கேற்றன. சுற்றுச்சூழல்
ஆர்வலர் அருண் பெள்ளி நன்றி கூறினார்.