கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தர்மகிரி பகுதியைச் சேர்ந்தவர் லூகா ஜோசப் (56). இவர் தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் மின்மோட்டாரை செவ்வாய்க்கிழமை மாலை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த கூடலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கூடலூர் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.