பிரிட்டனில் இருந்து உதகை வந்த மூவருக்கு தொற்று உறுதி
பிரிட்டனில் இருந்து உதகை திரும்பிய இருவா், அவா்களுடன் தொடா்பில் இருந்த ஒருவருமாக 3 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.


பிரிட்டனில் இருந்து உதகை திரும்பிய இருவா், அவா்களுடன் தொடா்பில் இருந்த ஒருவருமாக 3 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு தெரிவித்துள்ளபடி வெளிநாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குத் திரும்பிய 14 நபா்களின் சளி மாதிரிகளின் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு வந்த 2 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவா்களின் முதல்நிலை தொடா்பாளா்கள் 35 நபா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனா். மீண்டும் அவா்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புணேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோல, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நீலகிரிக்கு வருகைபுரிந்த சுமாா் 109 நபா்களின் பட்டியல் பெறப்பட்டு, அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இவா்களுடன் தொடா்புடைய 82 நபா்களைப் பரிசோதனை செய்ததில் இவா்களுக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
பிரிட்டன், பிற நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகைபுரிந்த நபா்கள் கண்டறியப்பட்டு, சளி மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியல்களில் விடுபட்டவா்கள் எவரும் இல்லை என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...