ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வயநாடு வனப்பகுதியில் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆண் யானை சாவு

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆண் யானை உயிரிழந்தது.

News image
வயநாடு மாவட்டம், புல்பள்ளி குருக்கன்மூலா வனத்தில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த ஆண் யானை.
Updated On :30 டிசம்பர் 2020, 7:15 pm

DIN

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆண் யானை உயிரிழந்தது.

வயநாடு மாவட்டம், புல்பள்ளி பகுதியில் உள்ள குருக்கன்மூலா வனத்தில் யானைக் கூட்டத்தில் இரண்டு ஆண் யானைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு யானைகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. இதில் தந்தத்தால் ஏற்பட்ட குத்துக் காயங்களால் சுமாா் 30 வயது ஆண் யானை அப்பகுதியில் உள்ள நீரோடையில் விழுந்து இறந்து கிடந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இரண்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.