நீலகிரியில் சுற்றித்திரியும் காட்டுமாடு: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராமன் தெருவில் திடீரென வந்த காட்டுமாடு அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 
நீலகிரியில் சுற்றித்திரியும் காட்டுமாடு: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராமன் தெருவில் திடீரென வந்த காட்டுமாடு அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் மிக அருகில் உள்ளது பரசுராமன் தெரு. இப்பகுதியில் எந்த விதமான வனங்களோ, சோலைகளோ, இல்லாத  சூழ் நிலையில் திடீரென இப்பகுதிக்கு வந்த காட்டுமாடு  டிடிகே சாலை, பரசுராமன் தெரு, கிருஷ்ணாபுரம், வழியாக வண்ணாரப்பேட்டை சாலை வழியாக சென்றது.

காட்டுமாடு ஊருக்குள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள், வீட்டிற்குள் முடங்கினார். பின்னர் காட்டுமாடு அங்கே இருந்து சென்றவுடன் நிம்மதி அடைந்னர். குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் ஒற்றை காட்டுமாடு நடமாட்டம் இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே வனத்துறையினர் இந்த காட்டுமாட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com