கேரளம் செல்லும் மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கும் அபாயம்
By DIN | Published On : 12th August 2020 08:33 AM | Last Updated : 12th August 2020 08:33 AM | அ+அ அ- |

கூடலூரிலிருந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்குச் செல்லும் முக்கிய மலைப்பாதையில் நாடுகாணியை அடுத்துள்ள வழிக்கடவு மலைப் பாதையில் ஏற்பட்ட பிளவு காரணமாக சாலை ஏற்கெனவே மூடப்பட்டது. அதை அடுத்துள்ள இரண்டாவது வளைவில் மீண்டும் சாலையின் குறுக்கே இரண்டு இடங்களில் மிகப்பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடா் மழை பெய்தால் அந்த மலைப் பாதை முழுவதும் அடித்துச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.