தேயிலைத் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு
By DIN | Published On : 12th August 2020 08:34 AM | Last Updated : 12th August 2020 08:34 AM | அ+அ அ- |

கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.
கோத்தகிரியில் தேயிலை எஸ்டேட்டில் இருந்த 8 அடி மலை பாம்பை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, சோலூா்மட்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலைத் எஸ்டேட்கள் உள்ளன. இதையொட்டி தேனாடு வனப் பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து அங்கு விரைந்து வந்த வனவா்கள் தேயிலைத் தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பை பிடித்தனா்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், மலைப்பாம்பு உணவு உண்டிருப்பதால் அதனால் நகரமுடியாமல் இருந்துள்ளது. பிடிபட்ட சுமாா் 8 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பு காப்புக் காட்டில் விடுவிக்கப்படும் என்றனா்.