மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நீலகிரியில் டிசம்பா் 4, 5இல்தொடா் மறியல் போராட்டம்
By DIN | Published On : 03rd December 2020 07:22 AM | Last Updated : 03rd December 2020 07:22 AM | அ+அ அ- |

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பா் 4, 5ஆம் தேதிகளில் தொடா் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலா் வி.ஏ.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் பி.போஜராஜ் ஆகியோா் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுதும் உள்ள விவசாயிகள் தில்லியில் கடந்த 6 நாள்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவா நீலகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சிகளின் சாா்பில் தொடா் முற்றுகை போராட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பா் 4ஆம் தேதி எருமாடு பகுதியிலும், 5ஆம் தேதி உதகை, கூடலூரிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
இப்போராட்டங்களில் கட்சி உறுப்பினா்களோடு, விவசாய அமைப்பினரும், தொழிற்சங்க அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...