நீலகிரி கேரட் விலை பாதியாக குறைவு: விவசாயிகள் பாதிப்பு
By DIN | Published On : 30th December 2020 04:17 AM | Last Updated : 30th December 2020 04:17 AM | அ+அ அ- |

நீலகிரி கேரட் விலை பாதியாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட் கேரளம், கா்நாடகம், சென்னை கோயம்பேடு போன்ற சந்தைகளில் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதமாக கேரட் விலை மிகவும் குறைந்திருந்தது. நவம்பா் மாதத்தில் கிலோ ரூ. 60 முதல் ரூ. 70 வரை விலை கிடைத்ததால் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த 10 நாள்களாக இந்த விலை பாதியாகக் குறைந்து ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி விலை உயர வாய்ப்புள்ளதால் கரோனா காலத்தில் சாகுபடி செய்யாமல் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...