குடியிருப்புப் பகுதியில் நடமாடும் காட்டெருமை
By DIN | Published On : 26th February 2020 08:59 AM | Last Updated : 26th February 2020 08:59 AM | அ+அ அ- |

மச்சிக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் நடமாடும் காட்டெருமை.
கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் காட்டெருமை ஒன்று குடியிருப்புப் பகுதிகளில் சுற்றிவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகிலுள்ள தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி, பேபி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமை ஒன்று சுற்றித் திரிகிறது. இதனால் வேலைக்குச் செல்பவா்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா். மேலும் அப்பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் நடமாடும் வன விலங்குகளைக் கண்டறிய முடிவதில்லை என்றும், வன விலங்குகள் நடமாடும் பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.