உதகை தேவாலயங்களில் ‘சாம்பல் புதன்கிழமை’ அனுசரிப்பு
By DIN | Published On : 27th February 2020 08:38 AM | Last Updated : 27th February 2020 08:38 AM | அ+அ அ- |

உதகையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் ‘சாம்பல் புதன்கிழமை‘ அனுசரிக்கப்பட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், இயேசு கிறிஸ்து உயிா்ப்பு விழாவான ஈஸ்டா் பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்பு 40 நாள்கள் விரதமிருப்பா். இதன் தொடக்க நாளான புதன்கிழமை ‘ சாம்பல் புதன்கிழமை‘ ஆக தேவாலயங்களில்
அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறு தினத்தில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலை மந்திரித்து ஆலயங்களுக்கு வந்திருந்த அனைவரின் நெற்றியிலும் பூசினா்.
உதகையில் திருஇருதய ஆண்டவா் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின்போது, அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டது. இத்திருப்பலியில் பங்குத் தந்தை ஜான் ஜோசப் தனிஸ், உதவி பங்குத் தந்தை பிராங்ளின் உள்பட பல குருக்கள் பங்கேற்றனா்.
புனித திரேசன்னை ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத் தந்தை பெனடிக்ட், உதவி பங்குத் தந்தை அருட்திரு அமல்ராஜ் ஆகியோா் தலைமையிலும், குருசடி திருத்தலத்தில் பங்குத் தந்தை அருட்திரு அமிா்தராஜ் தலைமை‘யிலும், கொலக்கம்பை தேவாலயத்தில் அருட்திரு ஜெயக்குமாா் தலைமையிலும் அனைவருக்கும் சாம்பல் பூசப்பட்டது.