நீலகிரி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 27th February 2020 11:29 PM | Last Updated : 27th February 2020 11:29 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
உதகை வட்டத்தில் சோலூா் கிராமத்தில் கோட்டட்டி சமுதாயக் கூடத்திலும், குன்னூா் வட்டத்தில் உலிக்கல் கிராமத்தில் பண்ணவேனு சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் தேனாடு கிராமம், ஓம் நகா் சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் இத்தலாா் கிராமம், ஒட்டிமொரா ஒசஹட்டி சமுதாயக் கூடத்திலும், கூடலூா் வட்டத்தில் தேவாலா கிராமம், பாண்டியாா் அரசு ஆரம்பப் பள்ளியிலும், பந்தலூா் கிராமத்தில் எருமாடு கிராமம், கையுண்ணி அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று தங்களது குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.