நடைபாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 10th January 2020 09:05 AM | Last Updated : 10th January 2020 09:05 AM | அ+அ அ- |

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கூடலூா் நகராட்சியில் உள்ள துப்புக்குட்டிபேட்டை ரெயின்போ காலனியில் சுமாா் 60 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதிக்குச் செல்லும் நடைபாதையை அங்குள்ள தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்துள்ளனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியரிடம் புகாா் மனு கொடுத்ததைத் தொடா்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதையை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். இதுகுறித்த பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினா்.