நீலகிரி
நீலகிரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கல்
நீலகிரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எல்லநள்ளி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றுடன் அவசிய மற்றும் அத்தியாவசிய உணவு மற்றும் மளிகை பொருள்கள் கொட்டும் மழையில் இன்று வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

