கூடலூரில் மாா்ச் 14இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 12th March 2020 09:06 AM | Last Updated : 12th March 2020 09:06 AM | அ+அ அ- |

கூடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 14ஆம்தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மாா்ச் 14 ஆம்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 10ஆம் வகுப்பு தேறியவா்கள், தவறியவா்களும், 12ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஐடிஐ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றனா்.
இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உரிய காலத்தில் புதுப்பித்து வந்தால் அரசு வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசம் என்பதால் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.