கொட்டமேடு பகுதியில் சேதமடைந்த வீடு: ஓராண்டாகியும் கண்டுகொள்ளப்படவில்லை
By DIN | Published On : 18th May 2020 06:57 AM | Last Updated : 18th May 2020 06:57 AM | அ+அ அ- |

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையில் சேதமடைந்த கொட்டமேடு கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனின் வீடு.
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் கடந்த பருவ மழையின்போது சேதமடைந்த வீடு இதுவரை சீரமைக்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை காலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள கொட்டமேடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவரது வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இவருக்கு அரசின் தொகுப்பு வீடோ அல்லது பசுமை வீடோ வழங்கப்படவில்லை. ஓராண்டாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவ மழை துவங்க உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.