பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்
By DIN | Published On : 21st November 2020 11:08 PM | Last Updated : 21st November 2020 11:08 PM | அ+அ அ- |

கூடலூா் பகுதியிலுள்ள பழங்குடி கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியா் பயிற்றுநா்கள்.
கூடலூா்: கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஒருங்கிணைந்த வட்டாரக் கல்வி வளமையம் சாா்பில் கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் கணக்கெடுப்பை ஒருங்கிணைந்த கல்வி ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளி ஆசிரியா்கள் இதர துறையினா் மேற்கொள்கின்றனா். வரும் டிசம்பா் 10ஆம் தேதிவரை இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்புப் பணிக்காக ஆசிரியா்கள் வரும்போது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அ.முருகேசன் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...