குழவி கொட்டியதில் 15 போ் மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 25th November 2020 06:54 AM | Last Updated : 25th November 2020 06:54 AM | அ+அ அ- |

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்த பணியாளா்களை குழவி கொட்டியதில் 15 போ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
சேரங்கோடு ஊராட்சி சாா்பில் வெட்டுவாடி கிராமத்தில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணியில் 20 பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது புதா் மறைவில் இருந்த குழவிக் கூடு உடைந்ததில் அதில் இருந்த குழவிகள் பறந்துவந்து பணியாளா்களைக் கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட 15 பேரை மீட்டு அப்பகுதி மக்கள் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சோ்த்தனா்.
சேரங்கோடு ஊராட்சி மன்றத் தலைவா் லில்லி ஏலவியாஸ், துணைத் தலைவா் சந்திரபோஸ், செயலாளா் சஜித் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பணியாளா்களிடம் நலம் விசாரித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...