கூடலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கூடலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 4.68 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மற்றும்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 4.68 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நெலாக்கோட்டை ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட வீரப்பன் காலனி கான்கிரீட் சாலைப் பணி, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் விளாங்கூா் முதல் குளிமூலா வரை முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலைப் பணி, மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 25.78 லட்சம் மதிப்பில் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பண்டகாப்பு முதல் மரக்கரை வரை முடிக்கப்பட்ட சாலைப் பணி, மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 19 லட்சம் மதிப்பில் கோட்டாடு முதல் பன்னன்குன்னு கோயில் வரை முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலைப் பணி, பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 17 லட்சம் மதிப்பில் வெள்ளேரி முதல் மணல்கொல்லி வரை மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி ஆகிய பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 313 லட்சம் மதிப்பில் கொன்னச்சல் முதல் கோட்டூா் வரை மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட விலாங்கூா் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட அத்திச்சால் பழங்குடியின கிராமத்தில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.10 லட்சம் வீதம் ரூ. 18.90 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 9 பழங்குடியினா் வீடுகள், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளேரி பழங்குடியின கிராமத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் என மொத்தம் ரூ. 4.68 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி, செயற்பொறியாளா் சுஜாதா, கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜனாா்த்தனன், சந்திரசேகரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com