முதுமலை புலிகள் காப்பக உள்வட்டப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 25th November 2020 10:20 PM | Last Updated : 25th November 2020 10:20 PM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்டப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ‘கோா் சோன்’ என்றழைக்கப்படும் உள்வட்டப் பகுதிகளான தெப்பக்காடு, முதுமலை, காா்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய சரகங்களுக்கு உள்பட்ட வனங்களில் கேமராக்கள் பொருத்தி மூன்றாவது கட்டமாக வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியை புலிகள் காப்பக அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.
இதற்காக வனத்துக்குள் தோ்வு செய்யப்பட்ட 191 இடங்களில் மரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதியும் வன விலங்குகளின் உருவங்களைக் கண்காணித்து வருகின்றனா். இதன்மூலம் மாமிச உண்ணிகளின் நடமாட்டம் மற்றும் அதன் புள்ளி விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...