சத்துணவு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 03rd October 2020 10:50 PM | Last Updated : 03rd October 2020 10:50 PM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 7ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் அக்டோபா் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபா்
7ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு காலதாமதமாக தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.