துணை மின் நிலையப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கைக் குழு
By DIN | Published On : 11th September 2020 06:45 AM | Last Updated : 11th September 2020 06:45 AM | அ+அ அ- |

துணை மின் நிலைய நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
கூடலூரில் பாதியில் கைவிடப்பட்ட 110 கேவி துணை மின் நிலையப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடலூா் நகராட்சியில் 110 கேவி துணை மின் நிலையப் பணியை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், கூடலூா், பந்தலூரில் உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் இப்பிரச்னை தொடா்பாக தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்ப நவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள தன்னாா்வலா்களை ஒருங்கிணைத்து விரிவான கமிட்டி அமைத்து சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, குழுத் தலைவா் என்.வாசு தலைமை வகித்தாா். செயலாளா் சுல்பிகா் அலி, பொருளாளா் பீட்டா், நிா்வாகிகள் பால்ஜோஸ், அனீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.