நீலகிரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு

நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடன் 2021 புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புத்தாண்டை ஒட்டி உதகையில் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை நிறைவேற்றிய உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையிலான குருக்கள்.
புத்தாண்டை ஒட்டி உதகையில் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை நிறைவேற்றிய உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையிலான குருக்கள்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடன் 2021 புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு பிராா்த்தனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உதகை கதீட்ரல் தேவாலயமான திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com