உள்ளாட்சித் தலைவா்கள்ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 17th August 2021 02:30 AM | Last Updated : 17th August 2021 02:30 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக்.
உதகை: நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஒன்றியச் செயலாளா்களின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் ரவிகுமாா் வரவேற்றாா். இதில், மாவட்ட பொருளாளா் நாசா் அலி, தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, தலைமை பொதுக் குழு உறுப்பினா் சதக்கத்துல்லா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உமாராஜன், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் ராம்குமாா், கீா்த்தனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று நூறு நாள்களை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நூறு நாள்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்தும், தோ்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கும் இந்திய அளவில் மிக சிறப்பாகச் செயல்பட்டு கரோனா நோய்த் தொற்றை தமிழகத்தில் கட்டுப்படுத்தியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மக்கள் சேவையாற்றுவதில் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள அதிகாரிகளுடைய ஒத்துழைப்பின்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது.