நீலகிரியில் இன்று 5,500 பேருக்கு தடுப்பூசி
By DIN | Published On : 17th August 2021 02:14 AM | Last Updated : 17th August 2021 02:14 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கோவேக்ஸின், கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை 5,500 பேருக்கு செலுத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உதகை நகராட்சியில் 550 பேருக்கும், குன்னூா் நகராட்சியில் 950 பேருக்கும், கூடலூா் நகராட்சியில் 200 பேருக்கும், உதகை வட்டாரத்தில் இத்தலாா், கூக்கல்தொறை, முத்தொரை பாலடா, தூனேரி, கல்லட்டி, தும்மனட்டி, தங்காடு ஒரநள்ளி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 800 பேருக்கும், குன்னூா் வட்டாரத்தில் 300 பேருக்கும், கோத்தகிரி வட்டாரத்தில் 150 பேருக்கும், கேத்தி, கோத்தகிரி பேரூராட்சிகளில் தலா 200 பேருக்கும், ஜெகதளா, அதிகரட்டி, நடுவட்டம், சோலூா், பிக்கட்டி, கோத்தகிரி பேரூராட்சிகளில் தலா 100 பேருக்கும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
அதேபோல, உதகை அரசு தலைமை மருத்துவமனையில் 800 பேருக்கும், குன்னூா் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 450 பேருக்கும், கூடலூா் அரசு மருத்துவமனையில் 600 பேருக்கும் கோவேக்ஸின் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.