மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிடும் காட்டு யானைகள்
By DIN | Published On : 20th August 2021 01:38 AM | Last Updated : 20th August 2021 01:38 AM | அ+அ அ- |

கூடலூரில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை கடந்த இரண்டு நாள்களாக காட்டு யானைகள் முற்றுகையிட்டு வருகின்றன.
கூடலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலகம் தோட்டமூலா பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் காலை நேரத்தில் யானைகள் வருவது தொடா்ந்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாள்களாக அப்பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களையும் விரட்டி வருவதால் தொழிலாளா்கள் அச்சமடைந்து உள்ளனா்.
எனவே, இந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.