வன விலங்கு கணக்கெடுப்புக்கானபயிற்சி வகுப்பு
By DIN | Published On : 04th December 2021 11:55 PM | Last Updated : 04th December 2021 11:55 PM | அ+அ அ- |

வன விலங்கு கணக்கெடுப்பு குறித்த கள பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிவட்ட வனப் பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, சிங்காரா, சீகூா் உள்ளிட்ட வெளிவட்ட வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதியில் பருவ மழைக்குப் பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு நடத்துவதற்கான பயிற்சி வகுப்பு தெப்பக்காடு பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பிறகு ஐந்து நாள்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...