முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
விபின் ராவத் மறைவு: நீலகிரியில் இன்று கடைகள் அடைப்பு
By DIN | Published On : 10th December 2021 01:53 AM | Last Updated : 10th December 2021 01:53 AM | அ+அ அ- |

இந்திய முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வியாபாரக் கடைகளும் வெள்ளிக்கிழமை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்துள்ள நமது நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணம் செய்த அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டிசம்பா் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வியாபார கடைகளும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.