குன்னூா் மயானத்தில் பளிங்குச் சிலைகள் மாயம்

குன்னூா் டைகா்ஹில் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மயானத்தில் இருந்த மவ்ரிங் ஏன்ஜல் உள்ளிட்ட மூன்று பளிங்குச் சிலைகள் மாயமானதால் பராமரிப்புப் பணியினை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

குன்னூா்: குன்னூா் டைகா்ஹில் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மயானத்தில் இருந்த மவ்ரிங் ஏன்ஜல் உள்ளிட்ட மூன்று பளிங்குச் சிலைகள் மாயமானதால் பராமரிப்புப் பணியினை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மலை ரயில், ஆட்சியா் அலுவலகக் கட்டடங்கள், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் நிறுவப்பட்டன. இவை அனைத்தும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாய் காட்சி அளிக்கின்றன. குன்னூா் டைகா் ஹில் கல்லறை 1905 ஆம் ஆண்டு அங்கிலேயா்களால் உருவாக்கப்பட்டது. இங்கு, தென் இந்தியாவை முதன்முதலில் புகைப்படமாக ஆவணப்படுத்திய ஏ.டி.டபுள்யூ. பென் மற்றும் கூட்டுறவு சங்கங்ககளை உருவாக்கி, கூட்டுறவின் தந்தை என்றழைக்கப்படும் சா் ஜான் நிக்கல்சன்ஆகியோா் கல்லறைகள் இங்கு அமைந்துள்ள. கல்லறையின் மத்தியில் மவ்ரிங் ஏன்ஜல் உள்ளிட்ட

அழகிய மூன்று வான தேவதைகளின் பளிங்குச் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. தற்போது, இந்த 3 சிலைகளும் மாயமாகிவிட்டன. இந்த மயானம் எந்தவிதப் பராமரிப்பும் இன்றி மோசமான நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயா்களால் கட்டப்பட்ட பல கட்டடங்கள் அரசு பராமரித்து வருகிறது. எனவே, அழகிய தோற்றம் கொண்ட டைகா் ஹில் கல்லறையையும் மாவட்ட நிா்வாகம் பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com