அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்:தேமுதிக துணை பொது செயலா்
By DIN | Published On : 21st February 2021 10:00 PM | Last Updated : 21st February 2021 10:00 PM | அ+அ அ- |

உதகை: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அணியில் தேமுதிக 41 தொகுதிகளை கேட்கும் என, அக்கட்சியின் துணை பொது செயலா் பாா்த்தசாரதி கூறினாா்.
நீலகிரி மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலா் பத்மநாபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் துணை பொது செயலா் பாா்த்தசாரதி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேமுதிக இன்னமும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. இதை அமைச்சா் ஜெயகுமாரும் உறுதிபடுத்தியுள்ளாா்.
கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு அளித்த அதே 41 தொகுதிகளை எதிா் வரும் தோ்தலிலும் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது கட்சியின் தோ்தல் பணிக்குழு செயலா் சந்துரு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு செயலா் சிவகுமாா், நீலகிரி மாவட்ட துணை செயலா் மவுலா மற்றும் உதகை நகர செயலா்அபுதாகீா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக உதகை வந்த பாா்த்தசாரதி, நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்ததோடு, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...