ஆசிரியா்கள் 2ஆவது நாளாக உண்ணாவிரதம்
By DIN | Published On : 26th February 2021 12:08 AM | Last Updated : 26th February 2021 12:08 AM | அ+அ அ- |

கூடலூரில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்.
கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.
கூடலூா் கல்வி மாவட்ட அலுவலா் அலுவலகம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், பணியிட மாறுதல் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஆணை வழங்காததைக் கண்டித்து ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்தவா்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...