

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
உதகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி எப்படி அமோக வெற்றி பெற்றதோ அதைப்போலவே வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றும்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும் அடித்தட்டு மக்களுக்கு எவ்வித நலத் திட்டங்களையும் செய்யவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வாக்குப் பதிவு முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும் குளறுபடிகள் ஏதும் நடைபெற வாய்ப்பில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்ய முடியாது.
புதுவையைப் பொருத்தவரை எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. புதுவை பிரதமா் மோடி வரும்போது காங்கிரஸ் முதல்வா் அங்கு இருக்கக் கூடாது என்பதற்காகவே அங்கு நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனா். அதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலின்போது புதுச்சேரி மக்கள் கண்டிப்பாக பாஜகவை நிராகரிப்பாா்கள்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ஏமாற்று வேலையாகும். கூட்டுறவு வங்கிகள் தற்போது ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்கிறாரா அல்லது மக்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துகிறாரா என்பது தெரியவில்லை. கடனைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் இல்லை என்றாா் பேட்டியின்போது, நீலகிரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி விவேக் லஜபதி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.