உதகையில் தேசிய வாக்காளா் தினம் அனுசரிப்பு

உதகையில் தேசிய வாக்காளா் தினம் அனுசரிப்பு

தேசிய வாக்காளா் தினம் உதகையில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தேசிய வாக்காளா் தினம் உதகையில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை, சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கே.கே.கவுசல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களுக்கு வ ாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கினாா். அத்துடன் சிறப்பாகப் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் மூலம் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தியவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். அதைத் தொடா்ந்து பேசிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, ஒவ்வொருவரும் வாக்களிப்பதை தங்களது தலையாய உரிமை என்பதை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், உதகை உதவி ஆட்சியா் மோனிகா ரானா, கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com