பிப்ரவரி 1இல் இருந்து மீண்டும் மக்கள் குறைகேட்பு முகாம்
By DIN | Published On : 30th January 2021 10:25 PM | Last Updated : 30th January 2021 10:25 PM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டம் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா அருகே உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட மக்கள் தவறாமல் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களுடன் ஆதாா் அட்டை, செல்லிடப்பேசியுடன் வர வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.