கூடலூரில் வளா்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி
By DIN | Published On : 07th July 2021 06:38 AM | Last Updated : 07th July 2021 06:38 AM | அ+அ அ- |

வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் கால்நடை மருத்துவா் எம்.சுகுமாரன்.
கூடலூா் பகுதியில் வளா்ப்பு நாய்களுக்கு வெறிநாய்க்கடி (ராபீஸ்) தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் நோய்த் தடுப்பு நாளை முன்னிட்டு, கூடலூரில் உள்ள பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில், வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
குறிப்பாக வெறிநாய்க்கடி, குரங்குக் காய்ச்சல், காசநோய், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் நோய்களாகும். இதைத் தடுக்க கால்நடைத் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து, பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவரும், மூத்த கால்நடை மருத்துவருமான எம்.சுகுமாரன் கூறியதாவது:
விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களைத் தடுக்க தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும். குரங்குக் காய்ச்சல் உள்ளிட்டவற்றைத் தடுக்க விலங்குகளை ஊருக்குள் வராமல் தடுப்பது நல்லது. பொதுவாக வளா்ப்புப் பிராணிகளுக்கும் அவை சாா்ந்த மனிதா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வராமல் தடுக்கலாம். நோய்களில் இருந்து பாதுகாக்க பதப்படுத்திய பாலை உட்கொள்வது நல்லது. வளா்ப்புப் பிராணிகளுக்கு வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே காலம் தாழ்த்தாமல் கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...