நீலகிரியில் மேலும் 58 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 93 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றின் காரணமாக கோவையிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 60 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். இவரையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 30,131 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 29,177 போ் சிகிச்சையின்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, சிகிச்சை பலனின்றி இதுவரை 174 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 780 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com