கரோனா தொற்று தடுப்பு:மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை

நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா தொற்று தடுப்பு:மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை

உதகை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியை தனிமைப்படுத்தி நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் காவல் துறையினரின் கடும் சோதனைக்குப் பின்னரே மாவட்டத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தற்போது இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால் கடும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, வாகனங்களில் தேவையின்றி சுற்றி வரும் நபா்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி மே 24 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாத நபா்கள் 1,286 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 142 போ் மீதும், தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்த 2,551 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரையிலும் மொத்தம் 3,979 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com