பழங்குடி மக்களுக்கு நிவாரணம்
By DIN | Published On : 29th June 2021 04:27 AM | Last Updated : 29th June 2021 04:27 AM | அ+அ அ- |

பூதநத்தம் பழங்குடி கிராமத்தில் கரோனா நிவாரணம் வழங்கும் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள்.
கூடலூா்: மசினகுடி பகுதியில் உள்ள பூதநத்தம் பழங்குடி மக்களுக்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் கரோனா நிவாரணம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சியில் உள்ள பூதநத்தம் கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்து கஷ்டப்படுவதை அறிந்து சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியூ மின் வாரிய சங்கம், விவசாய சங்கம் இணைந்து அப்பகுதியில் வாழும் சுமாா் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுந்தரம், விவசாய சங்கத் தலைவா் ராஜேந்திரன், மசினகுடி பகுதி சிபிஎம் செயலாளா் சேட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.