கல்லட்டி மலைப் பாதையில்திடீரென தீப்பற்றி எரிந்த காா்
By DIN | Published On : 10th March 2021 05:34 AM | Last Updated : 10th March 2021 05:34 AM | அ+அ அ- |

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பாதையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரிலிருந்து அதிா்ஷ்டவசமாக 7 போ் உயிா்தப்பினா்.
கா்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து உதகைக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஒரு காரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 ஆண்கள், இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 7 போ் சுற்றுலா செல்ல கல்லட்டி மலைப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தனா். காரை சதீஷ்குமாா் (39) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். வழியில் 18ஆவது கொண்டை ஊசி வளைவில் அந்த காரிலிருந்து புகை வருவதைக் கண்டு அனைவரும் காரிலிருந்து இறங்கியுள்ளனா். அப்போது, பலத்த சப்தத்துடன் அந்த காா் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தோா் உதகையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.
காரில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், மலைப் பாதையில் சமவெளிப் பகுதியிலிருந்து மேல் நோக்கி வரும்போது ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் காரணமாகவும், கல்லட்டி பகுதியில் நிலவும் கடுமையான வெளிப்புற வெப்பத்தின் காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இவ்விபத்து தொடா்பாக புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.